கசந்த லிவ் இன் உறவு; பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து, தீவைத்த வாலிபர் - டெல்லியில் அதிர்ச்சி
டெல்லியில் ஏற்கனவே மும்பையை சேர்ந்த ஸ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்த நபர் கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து அதனை ஒவ்வொரு துண்டாக எடுத்துச்சென்று காட்டுக்குள் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் டெல்லியில் மேலும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. டெல்லி காஜிபூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எரிந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து சூட்கேஸை கைப்பற்றி சோதித்து பார்த்தனர். உள்ளே முற்றிலும் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் இருந்தது. தடயங்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. போலீஸார் பெண் யார் என்பது குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் எந்த ஒரு தடயமும் சிக்காமல் இருந்து வந்தது.
இதையடுத்து சூட்கேஸ் கிடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஹூண்டாய் கார் ஒன்று அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கடந்து சென்று இருந்தது. அந்த கார் நம்பர் யாருடையது என்பதை தெரிந்து கொண்டு அதன் உரிமையாளரை போலீஸார் தேடி சென்றனர். ஆனால் அந்த நபர் காரை அமித் திவாரி(22) என்பவருக்கு விற்பனை செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அமித் திவாரியை பிடித்துச்சென்று விசாரித்த போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா பாண்டே என்று தெரிய வந்தது. இது தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் கூறுகையில், ``விசாரணையில் ஷில்பாவும் அமித்தும் உறவினர்கள் என்று தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரு ஆண்டு சேர்ந்து வாழ்ந்தனர். ஷில்பா அவரை திருமணம் செய்ய விரும்பினார்.
ஆனால் அமித் அதற்கு தயாராக இல்லை. ஷில்பாவை பிரிய நினைத்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே அமித் மது போதையில் இருந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அமித் ஷில்பாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து தனது டாக்சி டிரைவர் நண்பரை அழைத்து அதில் சூட்கேஸை வைத்து எடுத்துச்சென்றனர். ஆரம்பத்தில் சூட்கேஸை மேற்கு உத்தரப்பிரதேசத்திற்கு எடுத்துச்சென்றுபோட நினைத்தனர். ஆனால் சாலையில் அதிக அளவில் செக்போஸ்ட் இருந்ததால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அருகிலேயே உடலை போட்டுவிட முடிவுசெய்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுள்ளனர். வழியில் 160 ரூபாயிக்கு டீசல் வாங்கிச்சென்றுள்ளனர்.
சூட்கேஸை போட்டு அதன் மீது டீசலை ஊற்றி தீவைத்துள்ளனர். ஷில்பாவின் பெற்றோர் குஜராத்தில் வேலை செய்து வந்தனர். உடலை போட்டுவிட்டு தப்பிச்சென்று இருந்தார். அதற்குள் பிடித்துவிட்டோம். உதவிய டாக்சி டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs