செய்திகள் :

தஞ்சை: 916 முத்திரை, போலி நகை - அடகு வைத்து மோசடி செய்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது!

post image

தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் பகுதியில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரெட்டிபாளையம் சாலையில் உள்ள காந்திரபும் பகுதியை சேர்ந்த திவ்யா(31), செக்கடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி(38) ஆகிய இருவரும் தங்க வளையல் மற்றும் கை செயின் ஆகியவற்றை அடமானம் வைக்க சென்றுள்ளனர். ஏற்கெனவே இருவரும் அதே நிதி நிறுவனத்தில் அதே போன்று வளையல், கைசெயின் அடகு வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

போலி நகை அடகு வைத்த பெண்கள்

ஏற்கெனவே வைத்த அதே நகை போல் தற்போது கொடுத்ததால் நிதி நிறுவனத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து அதன் நிர்வாக அலுவலர் கஜேந்திரன், கள்ளப்பெரம்பூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். நகையை எடைப்போட்டு விட்டு, பணம் தருவதாக கூறி போலீஸ் வருவதற்காக நேரம் கடத்திய நிதி நிறுவனத்தினர், திவ்யா, சரஸ்வதியை காத்திருக்க செய்துள்ளனர். இதற்கிடையே, ஏற்கெனவே அடகு வைத்த நகையையும், தற்போது அடகு வைக்க கொடுத்த நகையையும் நகை மதிப்பீட்டாளர் சோதனை செய்தததில் அந்த நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், வெள்ளி பொருள்களுக்கு தங்க முலாம் பூசி, ஒரிஜினல் நகை போல் நம்புவதற்காக ஹால்மார்க் முத்திரை பதித்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் திவ்யா மற்றும் சரஸ்வதியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``தஞ்சாவூர் கீழவாசல், கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்த மணிவண்ணன்(37) வெள்ளிப்பொருள்களுக்கு தங்க முலாம் பூசி, போலி நகையாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அந்த போலி நகையை திவ்யா, சரஸ்வதி, சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த கவிதா ஆகிய மூன்று பேரிடம் கொடுத்து அடகு வைக்க சொல்லி பணம் பெற்றுள்ளார்.

இதற்காக மூன்று பேருக்கும் பங்கு கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு முதல் பல முறை போலி நகைகளை அடகு வைத்து ரூ. 16.31 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிவண்ணனை கைது செய்திருக்கிறோம். மேலும் தலைமறைவாக உள்ள கவிதாவை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்டுள்ள மூவரிடமும் இது போல் வேறு எங்கெல்லாம் மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற ரூ.1.60 கோடி ஹவாலா பணம்! – விழுப்புரத்தில் மடக்கிய போலீஸார்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையக் காவலர்கள், இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பேக் ஒன்றுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கோவை: இருசக்கர வாகன விபத்து; மன்னிப்புக் கேட்ட மாணவிக்கு முத்தமிட்ட இளைஞர் கைது; என்ன நடந்தது?

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவைய... மேலும் பார்க்க

வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் அத்துமீறல் - பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக இருந்தார். இவரின் வீட்டில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனி... மேலும் பார்க்க

`யாரும் அக்கறை காட்டவில்லை'- சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி - மயிலாடுதுறை சோகம்

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (69). இவரது மனைவி செந்தாமரை (59). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஹோமியோபதி மருத்துவராக இருந்த இளங்கோவன் திராவிடர் கழகத்தில் ... மேலும் பார்க்க

தென்காசி: பெண் குளிப்பதை மறைந்திருந்து ஆபாச வீடியோ எடுத்த பாஜக பிரமுகர் கைது

தென்காசி அருகே பெண்கள்‌ குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த அரசியல் பிரமுகரை போலீஸார்‌ கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "செங்கோட்டை அருகில் உள்ள புளியரை காவல் ... மேலும் பார்க்க

தாயாரின் திருமணம் மீறிய உறவு; உறவில் இருந்த நபரை கொன்று, குடலை எடுத்து வீசிய சகோதரர்கள்

குஜராத் மாநிலத்தில் தங்களது தாயாரின் காதலனை பலர் முன்னிலையில் மகன்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ரதன்ஜி(58). இவர் கொத்தனார் வேலை செய்து வர... மேலும் பார்க்க