ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், ...
தென்காசி: பெண் குளிப்பதை மறைந்திருந்து ஆபாச வீடியோ எடுத்த பாஜக பிரமுகர் கைது
தென்காசி அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த அரசியல் பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "செங்கோட்டை அருகில் உள்ள புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குமேடு பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான குமார். இவர், தென்காசி மாவட்ட பா.ஜ.க.வின் பட்டியலின அணி முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தார். இந்தநிலையில் இவர், அப்பகுதியில் பெண் குளிப்பதை, மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சம்பவத்தன்றும் பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, குமார் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திடீரென ஏதோ சத்தம் கேட்டு அந்தபெண் சுற்றிமுற்றி பார்த்தபோது குளியலறை அருகே குமார் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுப்பதை கவனித்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிடவும், குமார் அங்கிருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் புளியரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்" என்றனர்.