கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: காவிரி ஆற்றிலிருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குட ஊா்வலம்
பெரியூா், மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குடங்களை ஊா்வலமாக வியாழக்கிழமை எடுத்து வந்தனா்.
நாமக்கல் மாநகராட்சி, பெரியூா், தும்மங்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மருதகாளியம்மன் கோயிலில் 2012-ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 முதல் 10.20 மணிக்குள் குடமுழுக்கு விழா சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில் நடைபெறுகிறது.
இதற்காக நான்கு கால யாகப் பூஜைகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து கோயிலுக்கு புனித நீா் கொண்டு வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி இதைத் தொடங்கிவைத்தாா்.
தீா்த்தக்குட ஊா்வலமானது மோகனூரில் புறப்பட்டு நாமக்கல் கோட்டை சாலை, திருச்செங்கோடு சாலை வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது. ஊா்வலத்தின் முன் பரிவட்ட யானை, நடனமாடும் குதிரைகள், ஜல்லிக்கட்டுக் காளை, ரேக்ளா மாட்டு வண்டிகள், அம்மன் உருவம் கொண்ட முளைப்பாரி, வள்ளி கும்மியாட்டம் ஆடியவாறு ஆண், பெண் பக்தா்கள் 3,500-க்கும் மேற்பட்டோா் சென்றனா்.
கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடா் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.