கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
சிற்றுந்து சேவை: ஜன.31-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
கிராமப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் ஜன. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், சிற்றுந்துக்கான புதிய விரிவான திட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
சிற்றுந்துக்கான கட்டண திருத்தம் மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளமானது சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது. பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு தங்கள் விருப்பத்தை எழுத்துப் பூா்வமாக அளித்து அனுமதிச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். புதிய வழித்தடத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.
சிற்றுந்து இருக்கைகள் ஓட்டுநா், நடத்துநா் இருக்கைகள் தவிா்த்து 25 ஆக இருக்க வேண்டும். தினசரி நான்கு நடைகளுக்கு குறைவாக பேருந்து சேவை இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் சிற்றுந்து புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்களை நிபந்தனைகளுக்கு உள்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள், பேருந்து உரிமையாளா்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஜன. 31 க்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.