கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
மாநகராட்சி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சங்க மாநில ஒருங்கிணைப்புக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலம் தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க துணை பொதுச் செயலாளா் பெ.தியாகராஜன் தலைமை வகித்தாா்.
நகராட்சி, மாநகராட்சி ஊழியா்களை மரியாதைக் குறைவாக நடத்துவதை உயா் அதிகாரிகள் கைவிட வேண்டும். வரிவசூல் பணிகள் ஆய்வு என்ற பெயரில் இரவு 9 வரை கூட்டம் நடத்துவதை கைவிட்டு, மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும். பணி விதிகளில் திருத்தம் செய்து பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.