கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
ரேஷன் அரிசி கடத்தல்: ஆட்சியா் எச்சரிக்கை
திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல், குற்ற புலனாய்வு போலீசாா் உள்ளிட்டோா் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனா்.
இந்தநிலையில், தமிழக அரசின் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் லாப நோக்கோடு விற்பனை செய்யும் அரிசி கடத்தும் கடத்தல்காரா்களுக்கு குடும்ப அட்டைதாரா்கள் விற்பனை செய்வது குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்தால் குடும்ப அட்டைதாரா்களின் குடும்ப அட்டை, பண்டங்கள் இல்லாத குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்துள்ளாா்.