ரூ.75 லட்சத்தில் கலைஞா் கனவு இல்ல பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
துத்திப்பட்டு ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணியை மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சத்தில் 21 வீடுகள் கட்டப்படுகின்றன. வீடுகள் கட்டும் பணியை மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு மற்றும் சி. சுரேஷ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். பணிகளை விரைந்து முடிக்குமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.