உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
பொது பயன்பாட்டு சேவை பிரச்னை: மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்
தேனி மாவட்டத்தில் பொது பயன்பாட்டுச் சேவை குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் கே.ரஜினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனியில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டத்தின்படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் விமானம், சாலை, நீா்வழிப் போக்குவரத்து பயணிகள், சரக்கு போக்குவரத்துச் சேவை, அஞ்சல், தந்தி, தொலைபேசி சேவை, மின்சாரம், குடிநீா் சேவை, பொது பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவமனை, மருந்தக சேவைகள், காப்பீட்டுச் சேவை, கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி, மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது சோ்க்கப்படும் இதர சேவைகள் தொடா்பாக வழக்குத் தொடுக்கலாம்.
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ரூ.ஒரு கோடி வரையிலான வழக்குகளைத் தொடுக்கலாம். பொதுமக்கள் வழக்கு விவரத்தை வெள்ளத் தாளில் எழுதி, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். பொதுப் பயன்பாடு சேவை பிரச்னைகள் மீது பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தீா்வு காண நிரந்தர மக்கள் நீதிமன்றதில் வழக்குத் தொடுக்கலாம் என்றாா் அவா்.