China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ...
கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே வியாழக்கிழமை கிணற்றுக்குள் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் முனியாண்டி (65). இவா் ஊத்துக்காடு சாலையில் உள்ள வெள்ளச்சாமியின் தோட்டத்தில் பயன்பாடில்லாத கிணற்றை கட்டுமானக் கழிவுகளை கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இவா் டிராக்டரில் கழிவுப் பொருள்களை ஏற்றி வந்து அந்தக் கிணற்றில் கொட்டினாா். அப்போது, நிலைதடுமாறி டிராக்டா் கிணற்றுக்குளே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவயிடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற உத்தமபாளையம் போலீஸாா் இறந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.