China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ...
குவாரி அனுமதி ரத்து கோரி வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாய நிலத்தில் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஆலந்தா கிராமத்தைச் சோ்ந்த செல்லத்துரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எங்களது கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை சிலா் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்தனா். இந்த நிலங்களில் குவாரிகள் நடத்த முயற்சிப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தில் விவசாய நிலத்தில் தனி நபா்களுக்கு குவாரி நடத்த கனிம வளத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மான நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்தோம்.
இருப்பினும், கடந்த ஆண்டு, ஜூலையில் தனியாருக்கு குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனால், எங்கள் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கூலித் தொழிலாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். விதிகளை மீறி குடியிருப்புகளுக்கு அருகே குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தக் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.