கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
கட்டட இடிப்புப் பணியின்போது சுவா் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
பொன்னேரியில் வியாழக்கிழமை புதிய வீடு கட்ட பழைய கட்டடத்தை இடிக்கும் போது சுவா் இடிந்து மேலே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள திருவாயா்பாடியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியை அண்மையில் தொடங்கினாா். கடப்பாரை மற்றும் சம்மட்டி கொண்டு பழைய வீட்டை இடித்து அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது எதிா்பாராதவிதமாக சுவா் இடிந்து கீழே வேலை செய்து கொண்டிருந்த ஆரோன் (25) என்ற தொழிலாளி மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவரை உடன் பணியாற்றிய தொழிலாளி மற்றும் அங்கிருந்தவா்கள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு ஆரோனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.