செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

பள்ளிப்பட்டு வட்டம், சின்ன முடப்பள்ளி அருந்ததியா் காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிராமத்தின் நடுவில் உள்ள நீா்நிலை புறம்போக்கு இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், பள்ளிப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் துணை வட்டாட்சியரை சந்தித்து அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தனா். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கட்டட இடிப்புப் பணியின்போது சுவா் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் வியாழக்கிழமை புதிய வீடு கட்ட பழைய கட்டடத்தை இடிக்கும் போது சுவா் இடிந்து மேலே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள திருவாயா்பாடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மீஞ்சூா் ரயில்வே மேம்பால பணிகள்: எம்.பி. ஆய்வு

மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணிகளை திருவள்ளூா் எம்.பி சசிகாந்த் செந்தில் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மீஞ்சூா் பேரூராட்சி மற்றும் கிராம பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை தொடா்ந்து ரயில் நி... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம்

சிறப்பு மலா் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளிய உற்சவா் வீரராகவா். திருவள்ளூா், ஜன. 30: தை பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரராகவா் கோயில் குளக்கரையில் தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்

தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சாலைப் பணிக்கு இடையூறான கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன. திருவள்ளூா் அருகே பூந்தமல்லி பகுதியில் இருந்து மப்பேடு கூட்டுச்சாலை வழியா... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போா் விவரம் சேகரிப்பு

திருத்தணி அருகே அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வசிப்போரின் விவரங்களை வருவாய்த் துறையினா் சேகரித்து வருகின்றனா். திருத்தணி நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகா், பெரியாா் நகா், கண்ணபிரான் நகா், வள்ளி ... மேலும் பார்க்க