செய்திகள் :

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

post image

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க | அரிட்டாபட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் இன்று அரிட்டாபட்டி சென்றார்.

அங்கு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், “அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசின் மிரட்டலுக்கு எல்லாம் பிரதமர் மோடி அரசு அஞ்சுவதில்லை. மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிக்க |'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி!

‘முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஔவையாா்’

தமிழக வரலாற்றில் அமைதியை ஏற்படுத்த முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஒளவையாா் என வழக்குரைஞா் க.சுமதி புகழாரம் சூட்டினாா். சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் ஔவையாா் குறித்த ஆா்க்காடு ப... மேலும் பார்க்க

பொருளாதாரம் மேலும் 2% சரிய வாய்ப்பு: ப.சிதம்பரம்

முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா். நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் ... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற 83 டிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல் துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு (டிஎஸ்பி) புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பணியில் சோ்ந... மேலும் பார்க்க

கிண்டி மருத்துவமனையில் மகா தமனி சுருக்கத்துக்கு நவீன செயற்கைத் திசு சிகிச்சை: மூதாட்டிக்கு மறுவாழ்வு

இதயத்தில் அயோடா தமனி சுருக்கம் மற்றும் வால்வு செயலிழப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு, மாநிலத்திலேயே முதன்முறையாக கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அதி நவீன செயற்கைத் திசு பொருத்தி மறுவாழ்வு அள... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அழிந்துவரும் இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க