செய்திகள் :

இளம்பெண் பாலியல் வழக்கு; `குற்றம் நிரூபிக்கப்படவில்லை'- மரண தண்டனை கைதியை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

post image

மும்பையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி 23 வயது எஸ்தர் என்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஐதராபாத்திற்கு விடுமுறையில் சென்றுவிட்டு மும்பைக்கு ரயிலில் வந்தார். அவர் மும்பையில் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மும்பை லோக்மான்ய திலக் டெர்மினல் ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு அவர் காணாமல் போய்விட்டார். அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கழிமுகப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சந்திராபென் என்பவரை போலீஸார் நாசிக்கில் கைது செய்தனர். லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் சந்திராபென் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிடம் அவரை அவரது விடுதியில் விடுவதாக தெரிவித்தார்.

அப்பெண்ணும் அதற்கு சம்மதித்து பார்க்கிங் பகுதிக்கு சென்றபோது அங்கு பைக் நின்றது. அதில் ஏற அப்பெண் சம்மதிக்காத நிலையில் குறைந்த கட்டணத்தில் கொண்டு போய்விடுவதாக கூறி சம்மதிக்க வைத்து அவரை தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் கழிமுகப்பகுதியில் இருந்த புதருக்குள் அழைத்து சென்று அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். அதன் பிறகு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன பிறகு நாசிக்கில் இருந்து சந்திராபென் கைது செய்யப்பட்டார்.

ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் சந்திராபென் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் சந்திராபெனுக்கு விசாரணை நீதிமன்றம் 2015ம் ஆண்டு தூக்குத் தண்டனை வழங்கியது. இத்தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குற்றவாளியாக கருதப்படும் சந்திராபெனை இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர். அரசு தரப்பு சாட்சியங்கள் பலவீனமாக இருப்பதாகவும், சந்தர்ப்ப சாட்சியங்களுக்கு அப்பாற்பட்டு குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளுக்கு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் தேவை. ஆனால் அரசு தரப்பு அதனை தாக்கல் செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். சந்தர்ப்ப சாட்சியங்கள் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை என்றும் விசாரணையில் ஓட்டை இருப்பதாகவும் நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மும்பை போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள சந்திராபென் இக்கொலை சம்பவத்திற்கு முன்பு பல சிறிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படி இருந்தும் சாட்சியங்கள் சரியில்லாத காரணத்தால் கோர்ட் அவரை விடுதலை செய்துள்ளது. சந்திராபென் மூன்று முறை திருமணம் செய்தவர் ஆவார். அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து எஸ்தரின் தந்தையும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்தர் தந்தை ஜொனாதன் கூறுகையில், ''நாங்கள் என்ன செய்ய முடியும். அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். என்ன நடந்தாலும் எனது மகள் உயிரோடு வரப்போவதில்லை" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் அத்துமீறல் - பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக இருந்தார். இவரின் வீட்டில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனி... மேலும் பார்க்க

`யாரும் அக்கறை காட்டவில்லை'- சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்ற தம்பதி - மயிலாடுதுறை சோகம்

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (69). இவரது மனைவி செந்தாமரை (59). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஹோமியோபதி மருத்துவராக இருந்த இளங்கோவன் திராவிடர் கழகத்தில் ... மேலும் பார்க்க

தென்காசி: பெண் குளிப்பதை மறைந்திருந்து ஆபாச வீடியோ எடுத்த பாஜக பிரமுகர் கைது

தென்காசி அருகே பெண்கள்‌ குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த அரசியல் பிரமுகரை போலீஸார்‌ கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "செங்கோட்டை அருகில் உள்ள புளியரை காவல் ... மேலும் பார்க்க

தாயாரின் திருமணம் மீறிய உறவு; உறவில் இருந்த நபரை கொன்று, குடலை எடுத்து வீசிய சகோதரர்கள்

குஜராத் மாநிலத்தில் தங்களது தாயாரின் காதலனை பலர் முன்னிலையில் மகன்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ரதன்ஜி(58). இவர் கொத்தனார் வேலை செய்து வர... மேலும் பார்க்க

மும்பை: ஆபாச வீடியோவை காட்டி தொழிலதிபருக்கு மிரட்டல்; நண்பரின் அத்துமீறல்..

மும்பையில் சொந்த நண்பனிடம் ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை அந்தேரி பவாய் பகுதியில் வசிக்கும் ஜான் பெரேரா என்பவர் மீது அவரது நண்பர் புகார் ஒன்றை கொடுத... மேலும் பார்க்க

சேலம் : `ஒன்றா இரண்டா... எத்தனை மோசடிகள்?’ - அதிர வைக்கும் போலி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ஆத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவகாமி திருமண மண்டபம். இதில், கடந்த 8 மாதமாக புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை எனும் நிறுவனம் வாடகைக்கு இயங்கி வ... மேலும் பார்க்க