செய்திகள் :

சேலம் : `ஒன்றா இரண்டா... எத்தனை மோசடிகள்?’ - அதிர வைக்கும் போலி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

post image

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் ஆத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சிவகாமி திருமண மண்டபம். இதில், கடந்த 8 மாதமாக புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை எனும் நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலூரைச் சேர்ந்த விஜயபானு எனும் பெண் இருந்து வந்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்வது போன்ற தோற்றத்தை ஒருபக்கம் ஏற்படுத்தி, மறு பக்கம் மக்களை ஏமாற்றி, பண இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் நடத்திவந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து 12 கோடி ரூபாய் பணமும், 2.5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதுடன், இவருடன் சேர்ந்து பணமோசடியில் ஈடுபட்ட ஜெய பிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர்.

யார் இந்த விஜயபானு?

இந்நிலையில் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜயபானு மீது மேலும் சில புகார்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் குவியத்தொடங்கியுள்ளன.

முதலில் தன்னை ஒரு பாஜக நிர்வாகி என்று அடையாளப்படுத்திக்கொண்ட விஜயபானு, வேலூர் மாவட்ட பட்டியல் அணி தலைவராக இருந்துக்கொண்டு, 2021 ஆம் ஆண்டு நடந்த நகராட்சி தேர்தலில் 5-வது வார்டில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். அதன்மூலம் பாஜக-வில் இருப்பதாக கூறி வேலை வாங்கி தருவதாகவும், டெண்டர் எடுத்து தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பாஜக தலைமை விஜயபானுவை 2023 ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.

அதன்பின் சேலம் வந்த விஜயபானு தான் திமுக ஆதரவாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதற்காக அவர் செய்த செயல்கள் ஏராளம்... நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-40 இடங்களை திமுக கூட்டணி வென்றதால், அதற்காக சேலம் மாநகர் முழுவதும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அரசியல் புள்ளிகளின் போட்டோ போட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்.

பிடித்த பணத்தை கருவூலத்திற்கு கொண்டுவந்த காவல்துறை அதிகாரிகள்!

இதே போன்று 2012 ஆம் ஆண்டு விஜய பானு மீது மேலும் ஒரு மோசடி புகார் வந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூரில் போலி ஐ.பி.எஸ் வேடம்!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் சென்னை புழல் பெண்கள் தனிச்சிறையில் 2007 முதல் 2010 வரை முதல் நிலை காவலராக பணிபுரிந்த காலத்தில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த விஜய பானு என்கிற ஷீபா மேத்யூ தன்னை டெல்லியில் சிறப்பு தொழில் பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதாகவும் ஜெயிலில் நடக்கும் ஊழலை கண்டு அறிய திருட்டு வழக்கில் வந்து இருப்பதாகவும் சொல்லி அறிமுகமாகியுள்ளார். இதனை விஜயாவும் நம்பியுள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த விஜய பானு அடிக்கடி விஜயாவை வீட்டிற்கு சென்று பார்ப்பதும் பழகுவதுமாக இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய பானு தனது உதவியாளர் வெங்கடேசன் மதிவாணன் என்பவர் உடன் விஜயா வீட்டிற்கு சென்று சிஎம்சி யில் மேம்பாலம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்துள்ளேன் அதற்கு பணம் குறைகிறது என்றும் அதனால் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு, நான் இரண்டு நாட்களில் திருப்பித் தருகிறேன் என்று கேட்டு கொண்டதால் விஜயாவும் 22 சவரன் நகைகளை கொடுத்துள்ளார். இதனை வெங்கடேசன் பெயரில் வேலூரில் தோட்டப்பாளையத்தில் உள்ள வங்கியில் வைத்து பணம் பெற்று வருமாறு சொல்லியுள்ளார். மேலும் விஜய பானு தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று நம்ப வைத்தும் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும் பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் உள்ளதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கோவை: மது போதையில் இளைஞர் கொலை; கை, கால்களைக் கட்டி தண்ணீரில் வீசிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற... மேலும் பார்க்க

5 மாதங்களாக பூட்டிய வீட்டில் கிடந்த தந்தை, மகள் சடலங்கள்; விசாரணையில் சிக்கிய டாக்டர்- என்ன நடந்தது?

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 4-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருமுல்லைவாயல்... மேலும் பார்க்க

`டிகிரி சர்டிஃபிகேட் ரூ.10,000…’ - கட்டுக்கட்டாக போலிச் சான்றிதழ்கள்... அண்ணாமலை பல்கலை., சர்ச்சை!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்வாகச் சீர்கேடுகளாலும், முறைகேடுகளாலும் முடங்கும் நிலைக்குச் சென்றது. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கொண்டு, அந்த... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து திருச்சிக்குச் சென்ற ரூ.1.60 கோடி ஹவாலா பணம்! – விழுப்புரத்தில் மடக்கிய போலீஸார்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் புறக்காவல் நிலையக் காவலர்கள், இன்று வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய பேக் ஒன்றுடன் இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கோவை: இருசக்கர வாகன விபத்து; மன்னிப்புக் கேட்ட மாணவிக்கு முத்தமிட்ட இளைஞர் கைது; என்ன நடந்தது?

சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் சென்ற இளைஞர்கள் விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே கோவை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவைய... மேலும் பார்க்க

வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் அத்துமீறல் - பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கிய பின்னணி

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக இருந்தார். இவரின் வீட்டில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனி... மேலும் பார்க்க