Canada - India Row: `நிஜ்ஜார் கொலை; உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை' - கனட அரசின் அறிக்கை சொல்வதென்ன?
கனடா - இந்தியா உறவில் விரிசல் விழக் காரணம் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு. கனடாவில் கொல்லப்பட்ட இவரின் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இருநாடுகளுக்கு மத்தியிலான உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், கனட அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,``ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இது குறித்த பிரதமருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படிடையில் தவறான பிரச்சாரம் நடந்திருக்கலாம். இந்தக் கொலையில் வெளிநாட்டு முகவர்கள் ஈடுபட்டதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது. ஆரம்பத்திலிருந்து இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவந்தது இந்தியா என்பது குறிப்பிடதக்கது.