செய்திகள் :

பரிசு..! - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

செந்திலுக்கு நாளை 13 ஆம் வருட திருமணநாள். மனைவிக்கு ஏதாவது ஒன்று வாங்கிக் கொடுக்க கையில் காசு இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.

மனைவியை மனம் குளிரச் செய்ய வேண்டும் என்று குளிக்கும்போது, சாப்பிடும்போது, பைக்கில் போகும்போது, வரும்போது, நடந்தாலும் போனாலும் மனதில் யோசித்துக்கொண்டே இருந்தான். மனைவி ராதிகா அந்த சிந்தனையில் இல்லை. கணவனின் பொருளாதார நிலையை நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பரிசு..! - குறுங்கதை | My Vikatan
பரிசு..! - குறுங்கதை | My Vikatan

என்ன? தோழிகள் கேட்பார்கள், உறவினர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு எதையாவது சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று இருந்தாள். போன வாரம் தோழி பிரியா பேசினாள். தனது திருமணநாளிற்குத் தனது கணவன் தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்தான் என்று. அதற்கு முந்தைய மாதம் தோழி கல்பனா தனது திருமணநாளிற்குக் கணவன் இரண்டு பவுன் செயின் வாங்கிக் கொடுத்தான் என்று. ஏன் நேற்று உறவுக்கார பெண் தேவி தனது திருமணநாளிற்குக் கணவன் விலை உயர்ந்த புடவை வாங்கிக் கொடுத்தான் என்று.

நேரம் கரைந்து கொண்டிருந்தது. செந்தில் ரொம்பவே மனதளவில் உடைந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு திருமணநாளிற்கும் மனைவி உச்சி முகரும்படி பண்ண முடியவில்லையே என்று வருந்தினான். பிள்ளைகளும், "நாளைக்கு அம்மாவுக்கு என்ன கிப்ட் பண்ணப் போறீங்க?" என்று காலை கேட்டு பள்ளிக்குப் போனவர்கள், இப்பொழுது இரவு சாப்பிட்டு சற்றுமுன் தூங்கப் போகும்போதுவரை, கேட்டுவிட்டுச் சென்றார்கள். செந்திலிடம் எதற்கும் பதிலில்லை. மனைவியும் தூங்கி விட்டாள். இனி யோசித்துப் பலனில்லை என்று சோர்ந்து போனான்.

வெறுமையாய் போனை நோண்டிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு மெயில் வந்திருந்தது. ஓப்பன் பண்ணிப் பார்த்தான். மனம் பயங்கரமாய் குதூகலித்தது. சந்தோசமானது. அவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது. தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்தான்.

பரிசு..! - குறுங்கதை | My Vikatan
பரிசு..! - குறுங்கதை | My Vikatan

ஒரு வழியாய் அவனின் சந்தோஷத்திற்குக் காலைப் பொழுது உதவியது. ஆம் காலை விடிந்தது. மணி 5. மனைவி விழிப்பதற்குள் பைக்கை எடுத்துக்கொண்டு பறவை போல் பறந்தான். பைக்கை சந்தோசத்தோடு ஓட்டிக்கொண்டு வந்து பெட்டிக்கடை முன்பு வந்து நிறுத்தினான். ஆவலாய் ஓடிவந்து அங்கே கயிற்றின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் பிரபல வார இதழைப் பார்த்தான். கண்கள் பளிச்சிட்டது. மிகுந்த சந்தோசம் கொண்டான். அந்த வார இதழ் தனது மனைவி விரும்பி படிக்கும் புத்தகம்.

மனைவிக்குத் தோழிகள், உறவினர்கள் திருமணநாள் வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். "நகை, பணம், புடவை இதெல்லாம் விட இன்னைக்கு உன்னோட கணவன் உன்னோட திருமண நாளையும், உன்னையும்  உலகம் முழுக்க தெரிய வெச்சிட்டாரு. இதைவிடச் சிறப்பான பரிசு இந்த உலகத்துல இருக்க முடியாது" என்று வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். இந்த வாழ்த்துக்கு அடித்தளம் செந்தில் வேலை நேரம்போக கதைகள் எழுதுவான். அப்படி சில நாட்களுக்கு முன்பு எழுதிய கதைகளைப் பிரபல வார இதழுக்கு அனுப்பியிருந்தான். அந்த கதைதான் இன்று பிரசுரமாகியிருந்தது.

பரிசு..! - குறுங்கதை | My Vikatan
பரிசு..! - குறுங்கதை | My Vikatan

ராதிகா தனது அன்பு கணவன் செந்தில் வார இதழில் எழுதியிருந்த சிறுகதையைத் தனக்கு இந்த அற்புத நாளில் பரிசளித்ததாய் வாட்சாப், முகநூலில் ஸ்டேட்டஸ் வைத்து கணவனை நெகிழ்ந்து போய் பெருமைப்படுத்திப் பதிவிட்டிருந்தாள். அதைப் பார்த்துத்தான் எல்லோரும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். செந்திலோ துணைவி என்ற அந்த கதையை ராதிகா என்கிற புனைபெயரில் எழுதி ராதிகாவுக்கு மகுடம் சூட்டி வாழ்நாள் முழுவதும் விலை மதிக்க முடியா பரிசைக் கொடுத்தான் இந்த அற்புத திருமணநாளில்.

      - செந்தில் வேலாயுதம். 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

இந்துவின் நடிப்பு - குறுங்கதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நிதானம் தவறிக்கெட்டு! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலம் - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புகைச்சல்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மார்பிலே பட்ட காயம்! - ஒரு ராணுவ வீரரின் கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க