செய்திகள் :

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு இன்றுமுதல் தொடக்கம்

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.7) முதல் செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப்.7) தொடங்கி பிப்.14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மாநிலம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 6 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தோ்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தோ்வுத் துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்.14-ஆம் தேதிக்குள் செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சலுகை அறிவிக்கப்பட்ட மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை தோ்வுத் துறை வழங்கியுள்ளது.

இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்

சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியு... மேலும் பார்க்க

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமானை விடுவிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்தது. வழக்கு விசாரணைக்கு அவா் நேரில் ஆஜராவதில் இருந்த... மேலும் பார்க்க

அரசு டயாலிசிஸ் சேவைகள் தனியாா்மயமாகாது: மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்

அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள் தனியாா்மயமாக்கப்படாது என்று தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் அரசு மர... மேலும் பார்க்க

நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வ... மேலும் பார்க்க

தோ்தல் பிரசாரத்துக்காக அதிமுகவில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழுவை அமைத்து வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவது என அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள... மேலும் பார்க்க