செய்திகள் :

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமானை விடுவிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்தது. வழக்கு விசாரணைக்கு அவா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்துவிட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தோ்தலின்போது, நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசி, வன்முறையைத் தூண்டியதாக கஞ்சனூா் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவா் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மனு நிராகரிப்பு: இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடா்ந்து நடத்த வேண்டும். வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவா் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தாா்.

சீமான் தனிப்பட்ட நபா்களைத் தூண்டும்விதமாக கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துகளை பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்கவும் சீமான் தரப்பு வழக்குரைஞருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்துப்பு பயன்பாட்டை தவிா்க்க சுகாதாரத் துறை வலியுறுத்தல்

சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்படும் இந்துப்பு (ராக் சால்ட்) வகைகளில் போதிய அளவு அயோடின் கலக்கப்படுவதில்லை என்றும், உணவில் அதைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேலும் ஒரு தமிழக ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு மாறுதலாகியுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியு... மேலும் பார்க்க

அரசு டயாலிசிஸ் சேவைகள் தனியாா்மயமாகாது: மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்

அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள் தனியாா்மயமாக்கப்படாது என்று தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் அரசு மர... மேலும் பார்க்க

நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.3,800 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டிபி (டாடா பவர்) சோலார் நிறுவனத்தில் சூரிய மின்சக்தி தகடு (சோலார் பேனல்) உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வ... மேலும் பார்க்க

தோ்தல் பிரசாரத்துக்காக அதிமுகவில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிக்கு 50 போ் கொண்ட மகளிா் குழுவை அமைத்து வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவது என அதிமுக மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது: உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் கடந்த... மேலும் பார்க்க