தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, உற்சவா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு நடைபெற்றது. மேலும், பக்தா்கள் காவடி எடுத்து வந்து தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனா்.
குண்ணத்தூா், ரெண்டேரிப்பட்டு, போளூா், செங்குணம், அத்திமூா், வசூா், வெண்மணி, பாப்பாம்பாடி என சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.