தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்களின் சேவை பாதிப்பு
அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் ஷிவ் நாடார் பள்ளியில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
காவல் துறை, தீயணைப்புப் படை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சோதனையில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.