நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!
அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அவிநாசி: மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்ததா..? அதிகரித்ததா..?
அதன்படி, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கல்லூரி தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட 8 துறைகளை சார்ந்த 15-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.