மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி
Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை அறிவித்த ஸ்ரித்திகா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான `மெளனராகம் 2'வில் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சல்மானுள் ஃபாரிஸ் (Salmanul Faris). ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிழி இரண்டிலும் (Mizhirandilum) தொடரில் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மேகா மகேஷ். ரீல் ஜோடியான இவர்கள் தற்போது ரியல் ஜோடியாகி இருக்கிறார்கள். `மிஸ்டர் அண்ட் மிசஸ் சஞ்சய்' டு 'மிஸ்டர் அண்ட் மிசஸ் சல்மான்' என்கிற கேப்ஷனுடன் இந்த செய்தியை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் சல்மான். லட்சுமி - சஞ்சய் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடி ரியல் லைஃப் ஜோடியானதைக் கொண்டாடி வருகின்றனர்.
வாழ்த்துகள் சல்மான் - மேகா!
மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன். `நாதஸ்வரம்' தொடர் நாயகி ஸ்ரித்திகாவும் ஆர்யனும் மகராசி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். நண்பர்களாகப் பல ஆண்டுகள் பயணித்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஸ்ரித்திகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `லட்சுமி' தொடரில் நடிகர் சஞ்சீவ் விலகியதையடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் ஆர்யன் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
டிஸ்னி - ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வெப்சீரிஸ் `கனா காணும் காலங்கள் சீசன் 3'. இரண்டு சீசன்களை கடந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த மூன்றாவது சீசன் வெளியானது.
புது முக நடிகர்கள், யூடியூபர்ஸ் என நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து இந்த சீரிஸில் என்ட்ரியானார்கள். நட்பு, காதல், பிரிவு, கோபம் இதுதான் இந்த சீரிஸின் பிரதானமான கதைக்களம். இந்த சீரிஸின் மூன்றாவது பாகம் தற்போது நிறைவடைந்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...