செய்திகள் :

Siragadikka aasai : டிராஃபிக் போலீஸ், சீதா இடையே உருவாகும் நட்பு - வம்பு செய்யும் முத்து

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் மகிழ்வுடம் நடந்து முடிந்தது. வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்வுகளில் பாட்டு கச்சேரி வைப்பது எதற்காக என்பது நேற்றைய எபிசோடுல் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ரவி-ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டத்தில் மெல்லிய இசையுடன் இசைக் கலைஞர் பாடியக் காதல் பாடல்கள் ஒவ்வொருவரின் மனதையும் சாந்தமாக்கி, நினைவுகளை தூண்டுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. புதிய பாடல்களின் போது இளம் ஜோடிகள் கைக்கோர்த்து கொண்டு ரசித்ததும், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பாடும் போது அண்ணாமலை, விஜயா கைகளை பற்றிக் கொண்டு ரசித்ததும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Siragadikka aasai

அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் இதுபோன்றத் தருணங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சீரியலை பார்த்தப் பலருக்கும் கண்டிப்பாகத் தோன்றியிருக்கும்.

சில ரசிகர்கள் ரோகிணி சீக்கிரமாக மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சீரியலின் ப்ரோமோக்களில் கமெண்ட் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் அப்படி மாட்டிவிட்டால் ஸ்வாரஸ்யம் சற்றுக் குறைந்துவிடும்.

கதையில் ஸ்வாரஸ்யத்தைக் கூட்ட டிராஃபிக் போலீஸ் அருண், அடியாட்கள் பின்புலம் உள்ள சிந்தாமணி, முருகன் என புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Siragadikka aasai

நேற்றைய எபிசோடில் சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு அருண் தன் தாயுடன் வருகிறார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்ல, அருணுக்கு முக்கியமாக அரசு நிகழ்வு இருப்பதால் தன் அம்மாவுடன் மருத்துவமனையில் இருக்க முடியாது என்கிறார். அப்போது அங்கு வரும் சீதா அருணின் இக்கட்டான சூழலை புரிந்துக் கொண்டு அவருக்கு உதவி செய்வதாக சொல்கிறார்.

அருணின் தாயை சீதாப் பார்த்துக் கொள்கிறார். இப்படியாக அருணுடன் சீதாவுக்கு நட்பு ஏற்படுகிறது. முத்துவுடன் இரண்டுமுறை பிரச்னை செய்த டிராஃபிக் போலீஸ் தான் இந்த அருண் என்பது சீதாவுக்கு தெரியாது.

நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் முத்து அருணிடம் உணவகத்தில் வைத்து வம்பிழுக்கிறார். ஜாடைமாடையாகப் பேசி அருணை கோபப்பட வைக்கிறார். அருண் கோபப்பட்டு முத்துவின் சட்டையைப்பிடிக்கிறார். இருவருக்குள்ளும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேப் போகிறது.

Siragadikka aasai

இதனிடையே ரோகிணி சிட்டியை சந்தித்து முத்துவிடம் கவனமாக இருக்க சொல்கிறார். சிட்டி முத்துவுக்கு தன் மீது சந்தேகம் இருக்கும் என்பது ஏற்கனவே தெரியும் என்கிறார்.

ரோகிணி - சிட்டி சத்யாவின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டது, முத்துவின் மொபைலை திருடியது போன்ற விஷயங்கள் வெளியே வரக் கூடாது என்பதற்காக சத்யாவை மீண்டும் போலீஸில் சிக்க வைக்க சிட்டி திட்டமிடுகிறார். அதனை முத்து தடுப்பாரா? சிந்தாமணி விஜயாவுடன் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியை வென்று மீனா மண்டப ஆர்டரை செய்து முடிப்பாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.!

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`பாக்கியலட்சுமி' இனியாவின் டான்ஸ்... உருகிய ரீல் அம்மா.. கடுப்பில் ரியல் அம்மா

'பாக்கியலட்சுமி' சீரியலில்கோபி-பாக்யா தம்பதியின் மகள் இனியாவாக நடித்து வரும் நேகாவின் டான்ஸ் போட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலத்த ட்ரோலுக்கு ஆளாகியிருப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறார... மேலும் பார்க்க

நீ நான் காதல் : "அவருக்கும் இந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" - வதந்தி குறித்து தனுஷிக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நீ நான் காதல்'.இந்தத் தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜே தனுஷிக். அவர் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதை அவருடைய ரசி... மேலும் பார்க்க

`ஹேப்பியா இருக்கா புது பாய் ப்ரண்டோடு; தற்குறி நான் அவளின் நினைவோடு'- என்ன சொல்கிறார் தாடி பாலாஜி?

நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்ப... மேலும் பார்க்க

முதல் நாள் ராத்திரி விருது; விடிஞ்சா மகள் பிறக்கிறா... - அஸ்வின் கார்த்திக் செம ஹேப்பி

'சரவணன் மீனாட்சி' 'வானத்தைப் போல' 'அரண்மனைக் கிளி', 'குலதெய்வம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அஸ்வின் கார்த்திக். ஆரம்பத்தில் தொகுப்பாளராக டிவியில் நுழைந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர்.சீரியல்க... மேலும் பார்க்க

Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ்ருதி

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோட் முழுவதும் விஜயா நடனம் ஆடிக்கொண்டே இருந்தார். சும்மா சொல்லக்கூடாது அவரது நடன அசைவுகளின் நளினம் தாண்டவம் ஆடியது. பார்வதியும் விஜயாவுக்கு நிகராக நடனமாடி அசத்தினார்... மேலும் பார்க்க

`இதிகாசம் இதுதானா இவளோடு நடந்தேனா...' - தொகுப்பாளர் சங்கீதாவைத் திருமணம் செய்த அரவிந்த் செய்ஜு

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சங்கீதா.தொகுப்பாளினியாக வலம் வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அழகு' தொடரின் மூலம் நடிகையாக பலரையும் மிரட்டியிருந்தார். கனா சீர... மேலும் பார்க்க