`இதிகாசம் இதுதானா இவளோடு நடந்தேனா...' - தொகுப்பாளர் சங்கீதாவைத் திருமணம் செய்த அரவிந்த் செய்ஜு
`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சங்கீதா.
தொகுப்பாளினியாக வலம் வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அழகு' தொடரின் மூலம் நடிகையாக பலரையும் மிரட்டியிருந்தார். கனா சீரிஸின் முதல் பாகத்தில் மட்டும் இவர் நடித்திருந்தார். இதே சீரிஸில் கலை கதாபாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த் செய்ஜூ. சங்கீதா - அரவிந்த் செய்ஜூ இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரின் ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். டீச்சர் - ஸ்டூடண்ட் ஆக நடித்திருந்தவர்கள் கணவன் - மனைவியாக இணைய இருப்பதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
சங்கீதா சமீபத்தில் ஒளிபரப்பான `தமிழும் சரஸ்வதியும்' தொடரில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அரவிந்த் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `அய்யனார் துணை' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சின்னத்திரை நட்சத்திர ஜோடி வரிசையில் இந்த ஜோடியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில் அரவிந்த் - சங்கீதா திருமணம் சென்னையில் இன்று பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...