செய்திகள் :

மக்களுக்கான மகத்தான ஆட்சி: ஆதவ் அர்ஜுனா

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவையடுத்து, அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில் ``தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.

மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன், மக்களுக்கான மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக கட்சிக் கொடியினை கட்சித் தலைவர் விஜய் ஏற்றிவைத்ததுடன், கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் சிலைகளையும் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.

ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது!: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அறிஞருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமையும்- உதயநிதி ஸ்டாலின்

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்

அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணி நடைபெறவிருப்பதையொட்டி சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரு... மேலும் பார்க்க

பிப்.8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

பிப்.8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு ... மேலும் பார்க்க

3 முக்கிய சுகாதாரத் திட்டம்: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியில் தொடக்கம்

சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமி (MAHER) 3 சுகாதாரத் திட்டங்களை தொடங்கியுள்ளது.உயர்கல்வியில் முன்னோடியாக இருக்கும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர் கல... மேலும் பார்க்க

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத... மேலும் பார்க்க