மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!
புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை சுதந்திரமான மற்றும் நியாயமாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைந்துள்ளது.
இந்த குழுவில் அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்கரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், நிதின் ரவுத், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க |ரூ.8.57 கோடி பரிசை வழங்கத் தமிழ்நாடு காத்திருக்கிறது!: முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த குழு முதலில் மகாராஷ்டிரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தலைமைக்கு அறிக்கையை அளிக்கும்.
வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிரச்னைகள் குறித்தும் முன்கூட்டியே கண்காணிக்கும்.
இது காங்கிரசின் சிறந்த முயற்சி என கூறப்படுகிறது.