செய்திகள் :

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

post image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

அதிவேக சதம் விளாசிய அபிஷேக் சர்மா

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினாலும், 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். இங்கிலாந்து அணி வெவ்வேறு பந்துவீச்சாளர்களை பந்துவீச்சில் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. 17 பந்துகளில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா, 37 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும்.

அபிஷேக் சர்மாவின் இந்த சதம் சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட 2-வது அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா சாதனை; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மு... மேலும் பார்க்க

17 பந்துகளில் அரைசதம்; அபிஷேக் சர்மா சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அ... மேலும் பார்க்க