அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருது!
திருச்சி: பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை சிப்காட்டில் நடைபெற்ற சாரணா் இயக்க வைர விழாவில் பங்கேற்ற பாரத சாரண சாரணியா் இயக்க தேசிய தலைமை ஆணையா் கே.கே. கண்டேல்வால், மணப்பாறையில் சாரணா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றி, வைர விழாவை சிறப்பாக நடத்தி வரும் தமிழக சாரண சாரணியா் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், சாரணா் இயக்க பெருந்திரளணியை சிறப்பாக நடத்தியதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதை அறிவித்தாா்.
இதையும் படிக்க | மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வெள்ளி யானை சிலை விருது சாரணா் இயக்கத்தில் வழங்கப்படும் மிக உயா்ந்த விருதாகும். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குவார் என கண்டெல்வால் தெரிவித்தாா்.
முன்னதாக, பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை சிறப்பாக நடத்தியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.