உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும், இதனால் பெரிய மாற்றத்தை காண முடியும் என கேரளத்தைச் சேர்ந்த பாஜகவின் ஒரே மக்களவை உறுப்பினரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
கேரளம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற விரும்பினால், கல்வி உள்கட்டமைப்பு, சமூக நலன் போன்றவற்றில் தங்கள் மாநிலம் பின்தங்கி இருப்பதாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரளத்தைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான சுரேஷ் கோபி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக, உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
தில்லியின் மயூர் விஹாரில் பாஜக கேரளப் பிரிவு ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் பழங்குடியினர் விவகாரத் துறையை வழங்குமாறு கோரியதாகவும், ஆனால் அது தொடர்பான சில விதிகள் இதை அனுமதிக்காது என்று கூறியதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து கேட்கவில்லை என சுரேஷ் கோபி கூறினார். உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரானால், பழங்குடியினர் விவகாரத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்
"பழங்குடியினர் அமைச்சர் ஒருபோதும் பழங்குடியினர் அல்லாதவராக இருக்க முடியாது என்பது நம் நாட்டின் சாபக்கேடு. ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னேறிய சாதியினரின் நலனுக்காக அமைச்சராக ஆக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் நமது ஜனநாயக அமைப்பில் நிகழ வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும் "பழங்குடியினர் விவகாரங்களுக்கு ஒரு பிராமணர் அல்லது நாயுடு தலைமை தாங்கட்டும். பெரிய மாற்றம் இருக்கும்," என்று நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுரேஷ் கோபி கூறினார்.