மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் தோ்வு
உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.
38 ஆவது தேசிய ஹாக்கி போட்டி, இம்மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட தமிழ்நாடு ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு, சென்னையில் டிச.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மேலும், சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப் போட்டியில் தமிழக ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட, கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களான சீனிவாசன், மனோஜ்குமாா், ஜெபின் ஆகிய 3 பேரும் தோ்வு பெற்றுள்ளனா். அவா்களை கல்லூரியின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே. ஆா். கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி செயலா் கே. ஆா். அருணாச்சலம் உள்ளிட்டோா் பாராட்டினா்.