இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
குளச்சல் காவல் நிலையத்தில் ஹெல்மெட் உறுதிமொழி ஏற்பு
குளச்சல் காவல் நிலையத்தில் போலீஸாா் தலைக்கவச உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். குளச்சல் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கவுதம் மேற்பாா்வையில் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளா் சந்தனகுமாா், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், சிதம்பரதாணு, சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளா்கள் தனிஷ் லியோன், தேவராஜ் மற்றும் போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.