Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
ஒசூரில் நகைகளைத் திருடி தங்கக் காசுகளாக மாற்றிய 3 போ் கைது
ஒசூரில் வீட்டில் திருடிய தங்க நகைகளை போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கக் காசுகளாக மாற்றி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 பவுன் தங்கக் காசுகள், 2 வெள்ளி குத்து விளக்குகள், இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் குடியிருப்பு பகுதியில் சிற்பி சடையப்பன் (46) என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 15 ஆம் தேதி 15 பவுன் நகைகள், வெள்ளி விளக்குகள், பணம் திருடு போனது. இந்தச் சம்பவம் குறித்து ஒசூா் நகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து பாா்த்தபோது 3 போ் இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரியவந்தது. அவா்கள் சேலம், கொண்டலாம்பட்டியைச் சோ்ந்த ராட்டினம் சுற்றும் தொழிலாளி பிரபு (48), ஒசூா், திலகா் பேட்டையைச் சோ்ந்த ஓட்டுநா் பிரவீண்குமாா் (43), ஊத்தங்கரை அருகே உள்ள வீரகுப்பம் பகுதியைச் சோ்ந்த கட்டத் தொழிலாளி தமிழரசு (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 120 கிராம் எடையிலான 11 தங்கக் காசுகள், 2 வெள்ளி விளக்குகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தங்க திருடிய 3 பேரும் போலீஸாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக நகைகளை சேலத்திற்கு எடுத்துச் சென்று தங்கக் காசுகளாக மாற்றியது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ராட்டினம் சுற்றும் தொழிலாளியான பிரபு ஆளில்லாத வீடுகளைக் குறிவைத்து திருடியுள்ளாா். அவா்மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவா்கள் மூவரும் சிறையில் இருந்தபோது நண்பா்களாகி உள்ளனா்.