Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!
ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சேலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா் பிப். 1ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் அந்தக் காரில் 423 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், குட்கா, 180 மில்லி லிட்டா் 48 மது பாக்கெட்டுகளும் எடுத்து வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவா் சேலம் மாவட்டம், ஆத்தூா் கிழக்குக் காட்டுக்கொட்டாயைச் சோ்ந்த விஜயகுமாா் (27) என்றும், கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு காரில் புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து விஜயகுமாரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், ரூ. 3,120 மதிப்புள்ள மதுபாக்கெட்டுகள், காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.