ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
Weird Games: 'பீர் ஓட்டம்' முதல் 'மண்வெட்டிச் சறுக்கல்' வரை; இந்த வினோத பந்தயங்களைத் தெரியுமா?
விளையாட்டு என்றால் சவால் இருக்க வேண்டும், வேடிக்கை இருக்க வேண்டும், போட்டி இருக்க வேண்டும் எல்லாம் கூடி வந்தாலே எல்லாரும் சந்தோசப்படும் வகையில் விளையாட்டு அமையும். அப்படிப்பட்ட சில விளையாட்டுகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். ஆனால் இவைக் கொஞ்சம் வினோதமானவையும் கூட.
இவற்றில் சிலவற்றை உங்கள் சுற்றத்தாருடன் விளையாடிப் பார்க்கலாம். சிலவற்றை எப்போதுமே முயலாமல் இருப்பது நன்று!
நெருப்புக் கோழிப் பந்தயம் (Ostrich racing)
இந்த விளையாட்டு ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது. படிப்படியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. நெருப்புக் கோழி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குலுங்கிக் குலுங்கி ஓடும் அதன் முதுகில் அமர்ந்து இறுதி கோடுவரை செல்வதே பங்கேற்பாளர்களுக்குப் பெரும்பாடாய் இருக்க, பார்வையாளர்களுக்கோ பெரும் வேடிக்கையாக இருக்கும்.
செஸ் குத்துச்சண்டை (Chess boxing)
பள்ளிப் பருவத்தில் மதிய உணவு இடைவேளையில் தாறுமாறாக விளையாடிவிட்டு வந்து வகுப்பில் அமர்ந்தால், பாடத்தில் துளி கூட கவனம் செலுத்த முடியாமல் இருப்பதை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா... அதுதான் இந்த விளையாட்டின் சவால்!
முழுக்க முழுக்க மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் மற்றும் மூளை-உடல் ஒருங்கிணைப்பைக் கோரும் பாக்ஸிங்கும் மாறி மாறி நடைபெறும்.
உதைப் பந்து (Sepak takraw)
கைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுக்களின் கலவைதான் இந்த உதைப் பந்து. வாலிபால் விதிமுறைகளுடன் காலை வைத்து விளையாட வேண்டும். ஒரு அணிக்கு 3 வீரர்கள் மட்டும்தான்.
முந்தைய விளையாட்டுக்கு செஸ் மற்றும் பாக்ஸிங் தெரிந்திருக்க வேண்டுமென்றால், இந்த விளையாட்டுக்கு குங்ஃபு, டேக்வாண்டோ எல்லாம் கற்றிருக்க வேண்டும் போல...
மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடுதல் (Wife carrying)
ஃபின்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மனைவியைத் தூக்கிக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் தடைகளைக் கடந்து ஓட வேண்டும். இதில் வெற்றிபெறும் தம்பதிக்கு மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக வழங்கப்படும்.
உருளும் சீஸ் (Cheese rolling)
இங்கிலாந்தில் வசந்த காலத்தில் வரும் வங்கி விடுமுறை தினத்தில் இந்த போட்டி நடைபெறும். பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு குன்றின் மீது ஏறி நிற்க, நடுவர் சீஸ் ரோல் ஒன்றைக் கீழே உருட்டி விடுவார். அனைவரும் சரிவில் சீஸ் ரோலை பிடிக்க ஓடுவதுதான் விளையாட்டு. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.
இந்த வீர விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பலர் காயமடைகின்றனர்.
கோர முக போட்டி (World gurning contest)
இரண்டு போட்டியாளர்களில் கேவலமான முக பாவனையைக் காட்டுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இங்கிலாந்தில்தான் இந்த போட்டியைக் கண்டுபிடித்துள்ளார்கள். 1297ம் ஆண்டு முதன்முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெத்தைப் பந்தயம் (Bed racing)
இங்கிலாந்தில்தான் இந்த போட்டியும் தொடங்கியது. North Yorkshire town என்ற நகரில், ஆரம்பத்தில் ராணுவ வீரர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இப்போது அனைவரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு அணியின் 5 வீரர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படும் தலைப்பில் மெத்தை மற்றும் ஆடை அணிந்துகொள்வர். 3 கிலோ மீட்டருக்கு அந்த மெத்தையில் ஒருவரை வைத்து 4 சக்கர வண்டியில் தள்ள வேண்டும். இடையில் ஒரு ஆற்றையும் கடக்க வேண்டும் என்பதால் இது கொஞ்சம் கடினமான போட்டியும் கூட!
நெருப்பு கால்பந்து (Fireball Soccer)
கால்பந்து விளையாட்டுதான். ஆனால் ஒரு தேங்காயை ஒருவாரம் எரிபொருளில் ஊற வைத்து அதில் நெருப்பு மூட்டி, இரவில் வெறும் காலில் விளையாடுகின்றனர். இது இந்தோனேசிய இளைஞர்களால் விளையாடப்படுகிறது. தயவு செய்து இதை யாரும் வீட்டில் முயல வேண்டாம்!
பீர் ஓட்டம் (Beer mile)
சாதாரண ஓட்டப்பந்தயம்தான். இந்த விளையாட்டை வினோதமாகவும் அருவருப்பாகவும் மாற்றுவது பீர்தான். பந்தயக்காரர்கள் ஒவ்வொரு சுற்று ஓடி முடித்ததும் நின்று ஒரு கப் பீர் அருந்துகின்றனர். பிறகு என்ன... மைதானம் முழுக்க வாந்தி எடுத்து வைப்பதுதான்...
மண்வெட்டிப் பந்தயம் (Shovel racing)
இது பனி மலைகளில் விளையாடப்படுகிறது. மண் வெட்டி மேல் அமர்ந்துகொண்டு கீழே நோக்கிச் சறுக்குவதுதான் விளையாட்டு. இதுவும் நீண்டகாலமாக விளையாடப்பட்டுவரும் விளையாட்டாம்! 1997ம் ஆண்டு குளிர்கால X-Games போட்டியில் சேர்க்கப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs