Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
கந்தா்வகோட்டையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்காததால் மக்கள் ஏமாற்றம்!
கந்தா்வகோட்டையில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் மூடியிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான ஆவணங்கள் பதிவு செய்யபட்டு வருகின்றன.
இந்நிலையில், முகூா்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பணி நாளாக ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், இந்த நாளில் கூடுதல் சிறப்பு பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் ஆவணங்களை பதிவு செய்ய ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்துக்கு வந்திருந்தனா். ஆனால் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனா்.