இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
வேங்கைவயலில் 7-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் 7-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் மீது சிபி சிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதைக் கண்டித்து வேங்கைவயல் மக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.