Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
TVK: "பாஜக, திமுகவை எதிர்ப்பதுதான் கொள்கை என்பதை ஏற்று முடியாது" - தவெக குறித்து சரத்குமார் பளீச்
"நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட சிறப்பான பட்ஜெட் என்றுதான் பார்க்க வேண்டும்" என்ற பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான சரத்குமார் மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த ரியல் எஸ்டேட் கட்டுமான அமைப்பினரின் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்திய பட்ஜெட் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கானது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எனத் தனித்தனியாகச் சொல்லவில்லை எனப் பார்க்கக் கூடாது.
போக்குவரத்துத்துறை மற்றும் மெட்ரோவிற்கு 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அது நாட்டிலுள்ள அனைத்து மாநிலத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாட்டிற்கான பொதுவான பட்ஜெட், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட சிறப்பான பட்ஜெட் என்றுதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்திற்கு ஏதும் இல்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் வழக்கமாகச் சொல்லி வரும் கூற்று என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இது இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமைக்காகவும் உருவாக்கப்பட்ட பட்ஜெட்.
நாட்டிலுள்ள அனைத்து பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் சுயதொழில் தொடங்க 2 கோடி ரூபாய் கடன் உதவி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை.
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதிகம் பேச விரும்பவில்லை.
விஜய் கட்சி ஆரம்பித்து, சில மாதங்கள்தான் ஆகின்றன, அதைப் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. மக்களுக்காக என்ன செய்ய உள்ளார், அவருடைய திட்டங்கள் என்ன என்பதை சில மாதங்கள் பார்த்த பின்புதான் கருத்துச் சொல்ல முடியும்.
பாஜகவை, திமுகவை எதிர்ப்பதுதான் விஜய்யின் கொள்கை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் என்ன செய்ய உள்ளார், தற்போதைய ஆட்சியாளர்கள் என்ன செய்யவில்லை என்பதைப் பேசினால் அதுதான் கொள்கை. முதல் மாநாட்டில் ஆளுநர் தேவையில்லை எனப் பேசிய விஜய், பின்பு ஆளுநரைச் சென்று பார்த்ததன் மூலம் கொள்கையில் முரண்பட்டுள்ளார்'' என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs