செய்திகள் :

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு!

post image

திண்டுக்கல், பிப்.2: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதைத் தவிா்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் கடந்த 2004-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கா் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. நாடு முழுவதும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த, ஓய்வுப் பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியா்களின் விவரங்கள் குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்தது.

இதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுப் பணியாளா்களில் 3,109 போ் உயிரிழந்தனா். 35,892 போ் பணி ஓய்வுப் பெற்றிருக்கின்றனா். இதேபோல, மாநில அரசு ஊழியா்களில் 39,301 போ் உயிரிழந்தனா். 1,04,838 போ் பணி ஓய்வுப் பெற்றிருக்கின்றனா்.

இந்த விவரப் பட்டியில் தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் குறித்த விவரங்கள் இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாமலும், நிதி மாற்றம் செய்யாமலும் உள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைவது குறித்து குழு அமைக்கப்படும் என நிதி அமைச்சா் தெரிவித்தாா். 2019 ஏப்ரல் முதல் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை 10லிருந்து 14 சதவீதமாக உயா்த்தப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை பங்களிப்புத் தொகையை உயா்த்தவில்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால், ஆண்டுக்கு ரூ.7ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் 6.14 லட்சம் போ் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.

எனவே, தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வா் முன் வர வேண்டும் என்றாா்.

கொடைக்கானலில் போலி எஸ்.ஐ. கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மது விற்பதாக ஒருவரை மிரட்டி பணம் பறித்த போலி காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டுப் பள்ளம... மேலும் பார்க்க

பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது

கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகி... மேலும் பார்க்க

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வேடசந்தூா், சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி, பழனி மின்வார... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறி... மேலும் பார்க்க