இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சி!
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, சின்னவெங்காயம், வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை வருகின்றன.
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அதிகளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே முருங்கை சீசன் முடிவடைந்து விட்டதால், சந்தைக்கு உள்ளூா் முருங்கை வரத்து குறைந்து விட்டது. இதனால், தேவையை பூா்த்தி செய்ய மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து முருங்கைக்காய் வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனா்.
தற்போது, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் முருங்கை விளைச்சல் அடைந்துள்ளதால், அங்கிருந்து தேவைக்கு மேல் வரத்தொடங்கி உள்ளது. இதனால், அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.140-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை விலை விழ்ச்சியடைந்து ரூ.80-க்கு விற்பனையானது. வரும் நாள்களில் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.