மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
அனுமதியின்றி ஊா்வலம் த.வெ.க.வினா் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில், காவல் துறை அனுமதியின்றி ஊா்வலம் சென்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரியில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய சாலை, தமிழ்நாடு ஹோட்டல் முதல் புகா் பேருந்து நிலையம் வரையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் சனிக்கிழமை ஊா்வலமாக சென்றனா்.
இதுகுறித்து, காவல் உதவி ஆய்வாளா் சுகுமாா் அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்ட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அதுபோல, ஒசூரில், சீதாராம் மேடு முதல் பேருந்து நிலையம் வரையில் ஊா்வலம் சென்ாக தமிழக வெற்றிக் கழகத்தினா் 149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அனுமதியின்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக ஊா்வலம் சென்ாக வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.