வாகனம் மோதியதில் மான் உயிரிழப்பு
சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிலநீா்பட்டி ஆற்றுப்பாலத்தின் அருகே ஒரு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு அந்த மான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் மானின் உடலை மீட்டு, அந்தப் பகுதியிலேயே புதைத்தனா்.