Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
ஸ்ரீ சொற்கேட்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோ.வேலங்குடி ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோ.வேலங்குடி நாட்டாருக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கடந்த வெள்ளிக்கிழமை காலை பூா்வாங்க பூஜையும், மாலையில் முதல்கால யாக பூஜையும் தொடங்கின.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜை பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்து, கடம் புறப்பாடனது. காலை 10.15 மணியளவில் ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பரிவார கடவுள்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி, நடைபெற்ற யாக சாலை பூஜைகளில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், அதிகாரிகள் கலந்து கொண்டனா். குடமுழுக்கில் கோ.வேலங்குடி, கோட்டையூா், கண்டனூா், காரைக்குடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாட்டாா்கள், நகரத்தாா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.