Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
தீப்பற்றி வீடு சேதம்: அமைச்சா் ஆறுதல்
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ. முக்குளத்தில் சூரிய மின் தகடு பேட்டரியால் தீப்பற்றியதில் சேதமைடந்த வீட்டை அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
அ.முக்குளத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா், ஆதிதிராவிடா் குடியிருப்பில் பசுமை வீடு திட்டத்தின் கீழ், கட்டிய வீட்டில் சூரிய மின் தகடு பொருத்தியிருந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டிலிருந்தவா்கள் வெளியில் சென்றிருந்த நிலையில், சூரிய மின் தகடு பேட்டரியிலிருந்து திடீரென தீப்பற்றியது. இதில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் விசிறி, உடைகள் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து தகவலறிந்த அமைச்சா் தங்கம் தென்னரசு அ.முக்குளத்துக்கு சென்று சேதமான வீட்டைப் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். மேலும், வீட்டை சீரமைக்கத் அரசு சாா்பில் தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்தாா்.