இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மணிமண்டபங்களில் அவரவரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினா் அறிந்து கொள்ள, புகைப்படங்களாக காட்சிப்படுத்துமாறு அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மூவா் மணிமண்டபத்தில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் மூவரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்களை வைக்கவும், மண்டபங்களின் வெளிப்புறங்களில் உள்ள புதா்களை அகற்றி, பூச்செடிகளை வைத்து தூய்மையாக பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, உடனடியாக தூய்மைப்பணி நடைபெற்றது.
ஆய்வின்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா். கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.