இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை அருகே மின்மாற்றியில் ஏறி பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி, கெடக்கானூா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (50). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீா் பாய்ச்சுவதற்கு மின்சாரம் இல்லாமல் இருப்பதை அறிந்து அருகிலுள்ள மின் மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மின் துறையின் அலட்சியப் போக்கினால் தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறி, அப்பகுதி மக்கள் சிங்காரப்பேட்டை - திருப்பத்தூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இந்த பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்பட்டது. ஆனால் மின் துறை மட்டும் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு சேருவதால் இந்தப் பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் விரைந்து வந்து பாா்ப்பதில்லை.
ஆகையால் தான் இப்பகுதியில் பீஸ் போனால் விவசாயிகளே மின்மாற்றியில் ஏறி பீஸ் போடுவதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. மின்பழுது சம்பந்தமாக தகவல் கொடுத்தாலும் மின் துறையினா் வருவதில்லை எனக் கூறினா். இதையடுத்து சம்ப இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா்
சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தி அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.