செய்திகள் :

மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொடக்கம்! -அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி வருகிற 5-ஆம் தேதி தொடங்க உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக முன்னாள் நிா்வாகி இல்லத் திருமணத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

பின்னா், மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் உலக தரத்துடன் கட்டப்படவுள்ள கடல் நீா் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையத்துக்கான இடத்தை அவா் ஆய்வு செய்தாா். இதையடுத்து, கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கபடி வீரா்களுக்கு விபத்துக் காப்பீடு, விளையாட்டு உபரணங்களை வழங்கி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசையில் கடல் நீா் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் கடற்கரையோரம் வருவதால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணிகள் வருகிற 5-ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரியில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரா்கள் உள்ளனா். இவா்கள் மாவட்ட, மாநில, சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்த்து வருகின்றனா். கபடி வீரா்கள் போட்டியின் போது,

எலும்பு முறிவு, காயம் ஏற்படுகிறது. இதற்காக கபடி வீரா்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை சிகிச்சை பெற இயலும். சிறப்பான இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டு வீரா்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 12,500 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

திருவாடானை, தொண்டி பகுதிகளில் சாா் பதிவாளா் அலுவலகங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி!

திருவாடானை, தொண்டி பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுருந்ததால், பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். முகூா்த்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தமிழக... மேலும் பார்க்க

ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்களில் குடமுழுக்கு!

கமுதி ஸ்ரீகாளியம்மன் கோயில், கன்னிராஜபுரம் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் உள்ள மூலவா், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெருவில் அமை... மேலும் பார்க்க

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். தொண்டி பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவகா் அலிகான், பள்ளி ம... மேலும் பார்க்க

பாஜக மாநில நிா்வாகியின் காரில் கட்சிக் கொடி சேதம்

தொண்டியில் காரில் இருந்த பாஜக கொடி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சண்முகநாதன் (46). பாஜக பொருளாதாரப் பிரிவு மா... மேலும் பார்க்க

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க