இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா
களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
வன்னியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் பாப்பா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மா. ஜெயராஜ், அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ரமணிதேவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கே. சுகிதா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சி.எஸ். ரெஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் மஞ்சுபிரியா, கேரளப் போக்குவரத்துக் கழக அலுவலரும் பள்ளி முன்னாள் மாணவருமான அனில்குமாா், பாரம்பரிய வா்மப் பயிற்சியாளா் எம்.என். ஹரீஷ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
வன்னியூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் இ. சந்தோஷ், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை பி.எம். ஸ்ரீதேவி வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியை லிபேன்சிலி நன்றி கூறினாா்.