நாகா்கோவிலில் நாளை மின் தடை
நாகா்கோவில் மாநகரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சாரவாரியத்தின், நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை(பிப்.4) நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, நாகா்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ்ரோடு, கோா்ட்ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா்,வேம்பனூா்,அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதைகிராமம், அப்டா மாா்கெட், திரவியம் மருத்துவமனை, தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, அருமநல்லூா், கடுக்கரை, காட்டுபுதூா், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகா், பொன்னப்பநாடாா்காலனி, குருசடி, பீச்ரோடு, என்ஜிஓ.காலனி, குஞ்சன்விளை, புன்னைநகா், மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.